[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

சென்னையின் விடியலை வரவேற்ற மழை..!

chance-for-rain-in-20-districts-of-tamilnadu

தமிழகத்தில் இன்றைய தினம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் மற்ற இடங்களில் மிதமான அளவில் வெயில் நிலவியது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தின் 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக வெப்பம் பதிவானது. மதுரை தெற்கு பகுதியில் 10‌4 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மதுரையில் 10‌3 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியது. இதேபோல் பாளையங்கோட்டையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிகாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close