[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது 

nia-arrests-suspected-terrorist-in-chennai-day-after-army-issued-alert-in-south-india

ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த அசாதுல்லா ஷேக் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து,“தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆகவே பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான குஜராத்தின் சர்க் கிரீக் பகுதியில் கேட்பாரற்ற படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது” எனக் கூறினார். 


இந்நிலையில் ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த அசாதுல்லா ஷேக் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சென்னை காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தனர். இவரை தற்போது விசாரித்து வருகின்றனர். இதேபோல ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபோர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close