[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“எதிர்கா‌லத்திலும் வெளிநாட்டுப் பய‌ணம் தொடரும்” - முதல்வர் பழனிசாமி 

chief-minister-edappadi-palanisamy-returned-to-chennai

வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.

இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பயணத்தின் இறுதிக் கட்டமாக நேற்று துபாய் சென்றார். அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இதனையடுத்து தனது 13 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்,‌ செங்கோட்டையன், ஜெயக்குமார்‌‌ உள்ளிட்‌ட அமைச்சர்களும், முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட‌‌ கட்சி நிர்வாகிகளும்‌ முதல்வரை வரவேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், 13 நாள்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் வாயிலாக 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகத் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமென முதல்வர் கூறினார். சேலத்தில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். 

மேலும் பேசிய முதல்வர் பழனிசாமி, ''வெளிநாட்டவர்களை அவர்களின் உடையில் சென்று சந்தித்தால்தான் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதால் கோட் சூட் அணிந்தேன். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், போன்று தமிழகத்தை மேம்படுத்தவே சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். 

வெளிநாட்டில், சென்ற இடங்களில் எல்லாம் தமிழர்கள் தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். எதிர்கா‌லத்திலும் வெளிநாட்டுப் பய‌ணம் தொடரும்.தமிழ‌க ‌பாசனம் மேம்‌பாடு அடைய‌ இஸ்ரேலுக்கு செல்வேன்'' எனத் தெரிவித்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close