[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சென்னையிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

dengue-in-chennai

சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் 3 அல்லது 4 பேர் வரை டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்படுவதாக அம்மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட நோய் பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

பின்னர் பேசிய மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க‌ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 24 மணி நேரமும் கண்காணிப்பும், மேல் சிகிச்சைக்காக ஐ.சி.யு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார். நாளொன்றுக்கு 3 அல்லது 4 பேர் வரை டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக ஜெயந்தி கூறினார். கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 9 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close