[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மருத்துவ பரிசோதனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

9-infected-for-dengue-fever-in-cuddalore

கடலூர் மாவட்டத்தில் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 67 சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கடலூரில் 100-க்கும் அதிகமானோர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை முடிவில் 9 பேருக்கு டெங்கு உறுதியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடுகள் அருகே மழைநீரை தேங்கவிட வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குடிநீர் உள்ள பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும் என்றும், சுற்றுப்புறத்தை  தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை நாடவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close