[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

“இளைஞரணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை” - உதயநிதி ஸ்டாலின்

there-is-no-change-in-the-officers-in-dmk-youth-secretary-udhayanidhi-stalin

திமுகவில் இளைஞரணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூரில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைப்பதற்காக திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு திருவாரூருக்கு சென்றார். சன்னதி தெருவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சகோதரி இல்லத்தில் தங்கியிருந்த உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருவாரூர் அருகே நாரணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஏக்கர் அளவு கொண்ட திருவாசல் குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் குளம் தூர்வார்தல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக மதுரையில் கண்மாய் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இரண்டாவது பணியாக இன்று திருவாரூரில் திருவாசல் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளோம்.

இளைஞர் அணியால் முடிந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் குளம் தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம். இளைஞரணி நிர்வாகிகளில் மாற்றம் ஏதுமில்லை. நேர்காணல் மட்டுமே நடந்துள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது. 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close