[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க இஸ்ரோ முயற்சி

isro-try-to-capture-vikram-lander-accurately

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி மேற்கொண்டு வருகிறது.

சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண இந்தியாவே காத்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனிடையே  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், இருக்கும் இடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் புதிய தலைமுறைக்கு நேற்று தெரிவித்தார்.

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகக் கூறிய அவர் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். லேண்டர் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் விக்ரம் லேண்டரை துல்லியமாக படம்பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரை நிலவின் 100 கி.மீ. சுற்றுவட்டப் பாதையில் இருந்து 50 கி.மீ. தூரமாக குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதன் மூலமாக விக்ரமின் இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக படம் பிடிக்க ஏதுவாக இருக்கும் என்று தகவல்
 வெளியாகி உள்ளது. அத்துடன் விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னல் வெளியானால், அதை கண்டறியவும் நிலவின் அருகே ஆர்பிட்டர் கொண்டு செல்லப்பட உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close