[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

திடீரென தீப்பிடித்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர்

car-gets-fire-while-going-on-the-salem-bangalore-national-highway

சேலத்தில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்து தருமபுரி எல்லையில் தொப்பூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியின் வழியாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில், இன்று மதியம் சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. தொப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரில், திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த காரில் பயணித்த கார் ஓட்டுநர் மற்றும் உறவினர்கள் காரில் இருந்து இறங்கி கீழே ஓடிவந்தனர். 

            

காரின் முன்பகுதியில் பற்றிய தீயானது மளமளவென கார் முழுவதும் பரவியது. இந்த தீயால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனையடுத்து காரில் வந்தவர்கள், தீ விபத்து குறித்து தொப்பூர் காவல்துறையினருக்கும், தருமபுரி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். 

              

விரைந்து வந்த தருமபுரி தீயணைப்புத் துறையினர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரை மேலும் தீ பரவாமல் அணைத்தனர். கார் தீ பிடித்தவுடன் காரில் பயணம் செய்தவர்கள் உடனே வெளியே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close