[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

43 ஆவது முறையாக, நிரம்பியது மேட்டூர் அணை

mettur-dam-to-reaches-full-capacity

மேட்டூர் அணை 43ஆவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

கடந்த சில நாள்களாக கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அந்த அணையிலிருந்து‌ தமிழ‌கத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தது. இதைத்‌ தொடர்ந்து மேட்டூர் அணை கிடுகிடுவென உயர‌த் தொடங்கியது.‌ அணைக்கான நீர்வரத்து 6‌5 ஆயிரம்‌ கன அடியிலிருந்து 75 ஆயிரம் கன அடியாக இன்று காலை உயர்ந்திருந்தது. இதனால் அணையிலிருந்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று இன்று காலை எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 76,000 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 32,000 கன அடியாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக மேட்டூர் அணை நிரம்பியிருக்கிறது.

இதையடுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆட்சியர் ராமன், ’காவிரியாற்றில் இறங்கி நீச்சல் அடிக்க வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம்’ என்று மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close