[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

நீதிமன்றம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - கும்பல் வெறிச்செயல்

rowdy-killed-in-sivagangai

சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் தற்சமயம் காளையார்கோவிலில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று இவர் சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் அவர் வந்து கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. 

ராஜசேகரன் தப்பிச் செல்ல ஓடியபோது, ஒட,ஒட விரட்டிய கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகரன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிவகங்கை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையான ராஜசேகரன் மீது ஏற்கனவே 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close