[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இறந்த உடலை 12 கி.மீ தூக்கிச்சென்ற மலைவாழ் மக்கள் - தேனியில் அவலம்

mountain-people-bring-dead-body-up-to-12-k-m-on-their-shoulders-in-theni

தேனியில் சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை சுமார் 12 கி.மீ தூரம் மலைவாழ் மக்கள் தூக்கிச் சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் போடி குரங்கணி அருகே உள்ள முதுவாக்குடி மலை கிராமத்தில், சொத்து தகராறில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பவுன் (60) மற்றும் அவரது மைத்துனர் சக்திவேல் (35) ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சக்திவேல் துப்பாக்கியால் பவுனை சுட்ட நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்பு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பவுன் உயிரிழந்தார். அவர் வசித்த முதுவாக்குடி மலை கிராமத்தில் இருந்து குரங்கணிக்கு சாலை வசதி இல்லை. இதனால் அவரது உடலை உறவினர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு டோலி மூலம் சுமந்து சென்று பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பிரேத பரிசோதனை முடிந்தவுடன் குரங்கணி வரையில் உடல் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. 

அதற்கு மேல் சாலை வசதி இல்லாததால் குரங்கணியிலிருந்து மீண்டும் முதுவாக்குடிக்கு 6 கி.மீ தூரம் டோலி கட்டி அவரது உடலை உறவினர்கள் சுமந்து சென்ற அவல நிலை ஏற்பட்டது. தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித பலனும் இல்லை என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். 

மேலும், அவசர காலங்களில் சாலை வசதி இல்லாததால் பிரசவம் போன்ற மருத்துவ தேவைகளுக்கு சுமார் 6 கி.மீ தூரம் மலைப்பாதையில் நடந்து செல்வதாகவும், தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதியை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை வசதி செய்து தரவில்லை என இந்த மலைவாழ் மக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close