[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

தமிழிசை வழக்கில் கனிமொழி எம்.பி-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

chennai-high-court-had-ordered-to-issue-notice-to-kanimozhi

 தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கனிமொழி எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் கனிமொழியின் வெற்றியை செல் லாது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்குத் தொடர்ந்திருந்தார். 

அவர் தாக்கல் செய்த மனுவில்,  ’சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, அதை மறைத்தது தவறு. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழியின் வேட்புமனு குறித்து எனது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதனால் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு இன்று வந்தது. விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close