[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

எங்களை வீழ்த்தி வெற்றி பெற்றவர் ஸ்டாலின் - பாஜக தலைவர் புகழாரம்

c-p-rathakirushnan-tribute-stalin

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். 

திருப்பூர், திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் இல்லத் திருமண விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது “கருணாநிதிக்கு பின்னர் யார் என்று வருகிற போது ஸ்டாலின் தளபதியாக மட்டுமல்லாமல் எங்களையெல்லாம் வீழ்த்திய வெற்றித் தளபதியாகவும் அமர்ந்திருக்கிறார். அதிலிருந்து நான் ஒன்றை எடுத்துக்கொள்கிறேன். நாங்கள் உழைக்க வேண்டியது கருணாநிதியை போல இன்னும் நிறைய இருக்கிறது.” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close