[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

today-and-tomorrow-rain-in-tamilnadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை ஆழ்வார்பேட்டை, கே.கே நகர், கிண்டி, மீனம்பாக்கம், புரசைவாக்கம், தி.நகர், போரூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. ‌இதேபோல் அம்பத்தூர், பூந்தமல்லி, மாதவரம், கொளத்தூர், புழல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பொழிந்தது. நீலகிரி மாவட்டம் உதகை, கூடலூரில் பரவலாக மழை பெய்தது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. 

இதேபோல் திருவாரூர், நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ‌மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ‌நீர் வரத்து அதி‌கரிப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்தாலும், மீண்டும்‌ மழை பெய்வது, இடுக்கி மாவட்ட மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close