திருத்தணியில் மழையால் தண்டவாளத்தில் சரிந்த மரத்தினை, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அப்புறப்படுத்தி ரயில் சேவையை சீர் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தியும் மாலை மற்றும் இரவு நேரத்தில் அவ்வப்போது சிறிது நேரம் பலத்த மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. மாலை, 3:30 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் தோன்றி ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
காற்றுடன் பெய்த பலத்த மழையால் திருத்தணி ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை உள்பட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறாக ஓடியது. திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு வீட்டிற்கு சென்றனர்.
காற்று அடித்ததால் பழைய தர்மராஜா கோயில் எதிரே செல்லும் ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் ஒரு பகுதி உடைந்து ரயில் பாதையில் விழுந்தது. இதனால் அரக்கோணம்- திருத்தணி ரயில் நிலையம் இடையே ரயில் போக்குவரத்து 20 நிமிடம் பாதிக்கப்பட்டது. மேலும் பெங்களூருவில் இருந்து யஸ்வந்பூர் செல்லும் விரைவு ரயில் நடுவழியில் நின்றது. இதனைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் இருந்த மரக்கிளைகளை கைகளால் உடைத்து அகற்றிய பின் விரைவு ரயில் புறப்பட்டு சென்றது.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !