[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

அப்பாவை விலகி பயணிப்பது கஷ்டம்- தமிழிசை

i-dont-feel-for-criticism-tamilisai

மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எவ்வுளவுதான் தன்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப்போய்விட்டனர் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சிட்டிசன் ஃபோரம் மற்றும் தமிழகம் ரிசச் பவுண்டேஷன் அமைப்புகள் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ மேதகு என்பதைவிட பாசமிகு என என்னை அழைப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி. மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

எவ்வுளவுதான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்னை கஷ்டப்படுத்த நினைத்தாலும் அதில் அவர்கள் தோற்றுப்போய்விட்டனர். ஓட்டையாக இருந்தாலும் சப்பையாக இருந்தாலும் வருத்தப்பட தேவையில்லை; உயரம் குறைவாக இருப்பதை விமர்சிப்பார்கள். அதை கண்டு நான் வருத்தப்படவில்லை.

எதிர்மறையை நேர்மறையாக செய்தால் வெற்றி நிச்சயம். பயணத்தை ரசித்துக் கொண்டே சென்றால் நாம் செல்ல வேண்டிய இலக்கு தானாக வந்துவிடும். அப்பாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத சூழலில் நான் ரணப்பட்டு போயிருக்கிறேன்; தந்தையை விலகி பயணிப்பது என்பது மிகவும் கடினம். கண்டதை படித்தால் பண்டிதனாகலாம் என அப்பா சொல்லுவார். நான் கண்டதை படித்து ஆளுநர் ஆகியிருக்கிறேன்” என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close