[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

மணமகன் அறையில் செல்போன் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்

new-groom-cell-phone-theft-in-vizhuppuram

விழுப்புரத்தில் திருமண வீட்டில் மாப்பிள்ளையின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது தீவனூர். இந்தக் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த இரண்டாம் தேதி அதிகாலை இரண்டு மணி அளவில் அங்கு நடைபெறவிருந்த திருமண புதுமாப்பிள்ளையின் ஆண்ட்ராய்டு செல்போன் காணாமல் போயுள்ளது. 
இதுதொடர்பாக திருமண மண்டப உரிமையாளர் சௌந்தரராஜன் இடம் முறையிட்டபோது, அந்த மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காட்சிகளை சோதித்து பார்த்துள்ளார்.

அதில், திருமணத்திற்கு வந்தவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திருமண மண்டபத்திற்குள் நுழையும் இரண்டு இளைஞர்கள்  மாப்பிள்ளை அறைக்குள் சென்று அங்கிருந்த செல்போன் மற்றும் பிற பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. அதில் ஒரு இளைஞர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு இருந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து திருமண மண்டப உரிமையாளர் திண்டிவனம் ரோஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close