[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

“விலையில்லா அரிசி திட்டத்துக்கு பாதிப்பு இருக்கக் கூடாது”- அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்

tn-minister-kamaraj-met-union-ministers

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால், தமிழக அரசின் விலையில்லா அரிசி திட்டத்துக்கு பாதிப்பு நேரிட்டுவிடக்கூடாது என்று தமிழக உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைக்க டெல்லி சென்ற அமைச்சர் காமராஜ், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்தார். தமிழக அரசுக்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அளவை உயர்த்தி வழங்கக்கோரி மனு அளித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் சந்தித்த காமராஜ், பொதுவிநியோகத்துறைக்கு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டு மனு அளித்தார். முன்னதாக மத்திய பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் நடைபெற்ற, அனைத்து மாநில உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் காமராஜ் பங்கேற்று உரையாற்றினார். அப்போது தமிழகத்துக்கான மானியத்தொகை 330 கோடியே 47 லட்சம் ரூபாயை விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close