[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

திருடச் சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்..!

robbery-man-cooked-at-the-theft-place

வாணியம்பாடி அருகே வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்ததோடு வீட்டில் சமைத்து சாப்பிட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னம்பேட்டை தக்கடி தெருவில் வசித்து வருபவர் பாரூக் அஹமத். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளி பூட்டு உடைக்கப்பட்டதோடு, வீட்டுக்குள் இருக்கக்கூடிய அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த எல்இடி டிவி, மைக்ரோ ஓவன், மற்றும் இருசக்கர வாகனம், இரண்டு விலையுயர்ந்த கைகடிகாரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அத்துடன், கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாரூக் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close