[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

ஒரு பக்கம் நடத்துநர் மரணம்; மறுபக்கம் டிக்கெட் எடுக்காமல் 10,791 பேர் பயணம்

10-791-travelers-without-tickets-in-chennai-for-last-3-months

சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் கடந்த 3 மாதங்களில் பயணித்த 10,791 பேரிடம் இருந்து ரூ.16,80,850 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளுக்கு சலுகையாக, மாதாந்திர பஸ் பாஸ், குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு இடையேயான பஸ் பாஸ் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கின்றனர்.

அதனைத் தடுக்க அவ்வப்போது பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. டிக்கெட் எடுக்காமல் இருப்போரை கண்டறிய சிறப்பு டிக்கெட் பரிசோதகர்களும் தங்களது பணியினை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் சென்னை  மாநகரப் பேருந்துகளில் மொத்தமா 10,719 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 16,80,850 ரூபாய் அபராதத் தொகை  வசூலிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க டிக்கெட் எடுக்க வலியுறுத்திய நடத்துநரிடம், சீருடையில் இல்லாத காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு நடத்துநர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். விருத்தாசலத்திலிருந்து கடலூர் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த திட்டக்குடி காவல் நிலைய தலைமைக் காவலர் பழனிவேல், டிக்கெட் எடுக்க மறுத்துள்ளார். அவர் காவலருக்கான சீருடையில் இல்லாததால்‌, அடையாள அட்டையைக் காட்டுமாறு நடத்துநர் கோபிநாத் கேட்டுள்ளார். அதற்கு மறுத்த தலைமைக் காவலர், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாக்குவாதம் செய்தபடி வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த நடத்துநர் கோபிநாத், மயங்கி விழுந்தார். ஓட்டுநரும், பயணிகளும் நெய்வேலி பெரியகுறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர்.‌ அங்கு கோபிநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். சம்பவம் குறித்து மந்தாரக்குப்பம் காவல்நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசுப் பேருந்து நடத்துநரின் உயிரிழப்புக்குக் காரணமான தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close