[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு 

dad-and-daughter-killed-by-car-lorry-accident

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மில்டன் ஜெயக்குமார். இவர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில், இவரும் இவரது மகள் ரெனி லாரோசும் காரில் சேலத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது கேரளாவில் இருந்து வந்த லாரியின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. 

இதில், காரில் பயணம் செய்த தந்தை மில்டன் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ரெனி லாரோஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close