[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

போதையில் இருவரிடையே தகராறு: தடுக்கச் சென்றவர் கொலை

murder-of-a-drunken-dispatcher-in-madurai

மதுரையில் குடிபோதையில் நடந்த தகராறை விலக்கச் சென்றவருக்கு கத்திகுத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகர் தல்லாகுளம் அடுத்த அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகார்த்திக். இவரது தந்தை குடிபோதையில் இருந்ததால் மதுரை மருதுபாண்டியன்நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அவரை வீட்டில் இறக்கிவிட சென்றுள்ளார். அப்போது தனது தந்தை குடிப்பதற்கு நீதான் காரணம் எனக் கூறி, கார்த்திக்கை செல்வகார்த்திக் கத்தியால் குத்தியுள்ளார். 

அவ்வழியே சென்ற கார்த்திக்கின் உறவினரான சங்கையா அதனை தடுக்க சென்ற போது அவரையும் செல்வகார்த்திக் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த சங்கையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தகவலறிந்து வந்த போலீசார் சங்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான செல்வ கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close