[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போஸ்டர் யுத்தம்

protest-in-ariyanachi-village-against-bjp-leader-h-raja

கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்துக்குள் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடந்த போது சிலர் சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியநாச்சி கிராமத்தில் இருந்த பழமையான மாரியம்மன் கோவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்புப் பணிகளுக்காக இடிக்கப்பட்டது. அதை மீண்டும் கட்ட விடாமல் சிலர் தடுப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் கோயில் இருந்த இடத்தை ஹெச்.ராஜா பார்வையிட்டார். அப்போது அவரை காவல்துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அரியநாச்சி கிராமத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஹெச்.ராஜா கலந்து கொள்வார் என பா.ஜ.க.வினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதற்கு எதிராக திமுக மற்றும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டினர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் 145 மற்றும் 146 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

எனினும் ஹெச்.ராஜா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அரியநாச்சி கிராமத்திற்கு வந்த ஹெச்.ராஜா தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் ஊருக்குள் நுழைய காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

அதைக் கண்டித்தும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர் களுக்கு எதிராகவும் மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு நடுவில், கோயிலை உடனே கட்டும்படி சிலர் சாமி ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close