[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“போக்குவரத்து மீறல் புதிய அபராதம் இந்த வாரம் அமல்” - புதிய தலைமுறைக்கு தகவல்

new-traffic-fine-will-come-on-rules-in-this-week

போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராதம் தமிழகத்தில் இந்த வாரம் அமலாகிறது என புதிய தலைமுறைக்கு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என போக்குவரத்துத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக மாற்றியமைக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிப்பதில் குழப்பம் நிலவியது. பழைய அபராத தொகையையே காவல்துறையினர் வசூலித்து வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராதம் தமிழகத்தில் இந்த வாரம் அமலாகிறது என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. புதிய அபராதம் இன்னும் அமலுக்கு வராத நிலையில் புதிய தலைமுறைக்கு போக்குவரத்துறை பிரத்யேக தகவல் அளித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதிய விதிகள் சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்படும் எனவும் போக்குவரத்துறை கூறியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close