[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“பணத்தை வீசி எறியவில்லை” - திருமா குறித்து விளக்கம்

do-not-throw-throwing-money-explaination-about-thirumavalavan

லண்டனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பணத்தை வீசி எறியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஜீவன் என்பவர், இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமாக காங்கிரஸ் கூட்டணி சம்பந்தமாக சித்தரிக்கப்பட்ட படங்களை வீசி எறிந்ததாகவும், பணத்தை வீசவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால், திருமாவளவனிடம் மதமாற்றத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்கள், பணத்தை எறிந்தார்கள் என்று சிலர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் மறுத்து பேசியுள்ளார்.

முன்னதாக லண்டனில் தமிழ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து கண்டன குரல் எழுப்பியதாக தகவல் வெளியாகி இருந்து.

ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு லண்டன் தமிழர்களிடம் அவர் நிதி கேட்டதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்து அவர்கள், திருமாவளவன் மீது பணத்தை வீசியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில்  திருமாவளவனுக்கு எதிராக பணத்தை வீசி எறியவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close