[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஈபிஎஸ் - ஓபிஎஸ் வாழ்த்து

ganesh-chaturthi-2019-leaders-wishes

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகப் பெருமானின் அவதார நாளில், வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியின்றி வாழ வாழ்த்தியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி நாளில் வளமும் நலமும் பெருகவும், அன்பும் அமைதியும் உலகி‌ல் தழைத்தோங்கட்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close