[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தனியார் வசமாகும் மெட்ரோ ரயில் நிலையப் பொறுப்பாளர் பணி

chennai-metro-become-privatisation

சென்னையில் 9 மெட்ரோ ரயில் நிலையங்களின் நிலையப் பொறுப்பாளர்கள், ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் மின்னஞ்சல் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பா, கீழ்பாக்கம், நேரு பார்க், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் நந்தனம் ஆகிய 9 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஒப்பந்த ஊழியர்களே இனி செயல்படுவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிலையத்தில் நிலைய கட்டுப்பாட்டாளராக உள்ள நிரந்தர பணியாளர்கள் அனைவரும், வரவு செலவு கணக்குகள், முக்கியமான அறைகளுக்கான சாவிகள், கணினிகள் மற்றும் தங்கள் வசம் உள்ள பொறுப்புகளை புதிய பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக பயிற்சி பெற்று நிலைய கட்டுப்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்ட நிரந்தர பணியாளர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் ஏதும் பதிலளிக்கவில்லை. ஏற்கெனவே மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்பு பணிகளில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் முக்கிய பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் நிரந்தர பணியாளர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close