[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

“பொருளாதாரத்தை நிர்மலாவும், மோடியும் பார்த்துக் கொள்வார்கள்” - செல்லூர் ராஜூ

sellur-raju-support-nirmala-sitaraman

பிரதமர் மோடியும், நம்முடைய மண்ணின் மகள் நிர்மலா சீத்தாராமனும் நாட்டின் நிதி மேலாண்மையை சிறப்பாக வகுத்துக் கொண்டுள்ளனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா தொடுதிரை கைப்பேசிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

மொத்தம் மதுரை மாவட்டத்தில் 3000 பேருக்கு கைப்பேசி வழங்க உள்ள நிலையில், முதல்கட்டமாக இன்று 1664 பேருக்கு தொடுதிரை கைபேசி வழங்கப்பட்டது. 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரமாக உள்ளது. அதில் ஏற்றத்தாழ்வு வரத்தான் செய்யும். அப்படி இருக்கும் போது ஒரு சில திட்டங்கள் பாதிக்கத்தான் செய்யும்.
 பொருளாதார வீழ்ச்சியில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பிரதமர் மோடியும், மண்ணின் மகள் நிர்மலா சீத்தாராமனும் நிதி மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். நிச்சயமாக பாதிப்பு தாக்கம் அதிகளவில் வராது. இது வழக்கமான ஒன்று” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close