[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

3 நாட்கள் தொடர் விடுமுறை - போக்குவரத்து நெரிசலால் முடங்கிய கோயம்பேடு

chennai-koyambedu-traffic-totally-jam-for-week-end-buses

சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் வெளியூர் செல்லும் பேருந்துகளால், கோயம்பேடு போக்குவரத்து நெரிசலால் முடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதி பொதுவாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஏனென்றால் இரண்டு நாட்கள் விடுமுறையில் வெளியூர் செல்லும் பயணிகள் அதிக அளவில் பேருந்து நிலையத்தில் குவிந்திருப்பார்கள். இதனால் வழக்கத்தைவிட அன்று அதிக பேருந்துகள் இயக்கப்படும். 

இந்நிலையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைடன் திங்கட் கிழமையும் விநாயகர் சதுர்த்தி என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக வருகிறது. இதனால் கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாலை நேரத்தில் பெய்த மழையால், போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டது. 

அனைத்து முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்தை சீர் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சுரேந்திரநாத் தெரிவித்துள்ளார். 3 துணை ஆணையர் தலைமையில், 3 காவல் ஆய்வாளர்கள், 10 துணை காவல் ஆய்வாளர்கள், 30 காவலர்கள், 50 துப்பாக்கி ஏந்திய சிறப்பு காவல்படையினர் என நூற்றுக்கும் அதிகமானோர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னையில் போக்குவரத்து சீராக இரண்டு மணி நேரமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close