[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

“கோட், சூட் போடுவது தனி மனித உரிமை” - முதல்வரை ஆதரித்த சீமான்

seeman-press-meet

ஆயிரம் இருந்தாலும் பழனிசாமி தமிழகத்தின் முதல்வர்; அவர் கோட், சூட் அணிவதை கேலியாக பார்க்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆடை என்பது அவரவர்களின் தனி மனித உரிமை. முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார். அது ஒரு குளிர் பகுதி. அதற்கேற்ப உடையணிகிறார். வேறு வேலையில்லாதவர்கள் சமூக வலைதளங்களில் இதனை கேலி செய்கிறார்கள். அது மனநோயாளிகளின் வேலை.

ஆயிரம் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முதலமைச்சர். அதனை எப்படி இழிவாக பார்க்க முடியும். பெருந்தலைவர் காமராஜ் ரஷ்யா செல்லும்போது வேட்டி சட்டையுடன் சென்றார். அது இன்னும் எங்களுக்கு பெருமையாக இருந்தது” என்றார். 

மேலும் அவர், “யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன்.'சினிமாவில் ரஜினிகாந்திற்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார்'” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close