[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

குடிநீர் கேட்டு போராடினால் கைது செய்வதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

high-court-judge-condemned-to-tamilnadu-government-about-water-protest-case-file

குடிநீர் கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

திருப்பூர் பழையகோட்டையில் 2017 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து நித்யானந்தம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்குப்பதிவு காரணமாக காவலர் பணி வாய்ப்பை இழந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “நீண்ட காலமாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். அதை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காமல் வழக்கு பதிவது அரசு இயந்திரத்தின் அக்குவமின்மையை காட்டுகிறது” எனத் தெரிவித்தார். 

மேலும் திருப்பூர் பழையகோட்டையில் 2017 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராடிய 32 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close