[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

“செப்டம்பருக்குள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை தாக்கல்” - சிபிஐ

report-will-filed-before-september-15-about-tuticorin-gun-fire

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஒரு பக்க விசாரணைக் குறிப்பை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் தாக்கல் செய்தார். அதில், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை பதிவு செய்த 207 வழக்குகள், சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதுவும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் ஆவணங்களும், சிசிடிவி காட்சிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16-ஆம் தேதி விசாரணை நிலை குறித்த அறிக்கை உறுதியாக தாக்கல் செய்யப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பலியான 13 பேர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கலவரம் தொடர்பான விசாரணையில் காவல்துறை, வருவாய்த் துறை, போராட்டக்காரர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நிலவரம் குறித்த தகவலை மதியம் தெரிவிப்பதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close