[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்பு

local-body-elections-before-december

தமிழ்நாட்டில் 3‌ ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, நவம்பர் - டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பழங்குடியினருக்கு ‌உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதன் பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது.

இதுகுறித்த வழக்கு ஒன்றில், அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று உச்சநீதி‌மன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள தேர்தல் ஆணையம், கிராமப் பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறையிலும், பிற உள்ளாட்சிகளில் மின்னணு இயந்திரங்களைக் கொண்டும் வாக்குப்பதிவை நடத்த முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

நவம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் முதல் வாரத்துக்குள் 2 அல்லது 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக மாநிலத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close