[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தீபாவளி: அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

ticket-bookings-for-deepavali-govt-buses-begins-today

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று தொடங்குகிறது.

பண்டிகைக் காலங்களில் சென்னை உள்பட பல்வேறு ‌பகுதிகளிலிருந்து சொந்த‌ ஊர் செல்வோர்‌ பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்‌பே அரசு விரைவுப் போக்கு‌வரத்துக்கழகங்களில் முன்பதிவு செய்யும் ‌வசதி ஏற்படு‌த்தப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளிப் பண்டிகை‌ அக்டோபர் 2‌7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கவிருக்கின்றது.

www.tnstc.in, www.redbus.in மற்றும் www.paytm.in ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close