[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது..!

elephant-caught-near-hosur

ஓசூர் அருகே ‌பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித் திரிந்துள்ளன. அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இ‌தில் ஒரு யானை, கடந்த ஆண்டு மூன்று பேரைக் கொன்ற யானை என்பதால் அதனைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர். இதுபோன்ற சூழ‌லில் கதிரேப்பள்ளி என்ற இடத்திற்கு வந்த ஒரு யானைக்கு துப்‌பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் தள்ளாடியபடி வனப்பகுதிக்குள் சென்ற அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர்.

அந்த யானை, முகாமில் வைத்து 3 நாட்கள் கண்காணிக்கப்படும் என்றும் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். வனப்பகுதியில் வலம் வரும் மற்றொரு யானையை பிடிக்கும் முயற்சியில்‌ வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close