[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

rain-chances-in-4-districts

தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அநேக இடங்களில் சேலசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. நங்கநல்லூர், பம்மல், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, வடபழனி, போரூர், முகலிவாக்கம், திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close