[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்

bus-fallen-in-thiruvannamalai-10-public-got-inquired

திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பேருந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, தண்ணி கேன் ஏற்றிக்கொண்டு சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த மினி வேனை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. அப்போது எதிர்ப்பாராத விதமாக மினிவேனின் பின்னால் மோதிய பேருந்து, சாலையோர இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான பேருந்தில் 46 பயணிகள் இருந்தனர். இதில் 3 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு, சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் உருவானது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close