[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

“மக்கள் சேவையில் பல்லாண்டு பயணிக்கட்டும்” - புதிய தலைமுறைக்கு முதல்வர் வாழ்த்து

puthiya-thalaimurai-step-on-9th-year-cm-palanisamy-wishes

புதிய தலைமுறை 9ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், “தொலைக்காட்சி சேவை என்பது கடும் போட்டியால் நிறைந்த துறை ஆகும். இதில் 9ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைப்பது என்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். அரசுக்கும், பொது மக்களுக்கும் இடையில் இணைப்பு பாலமாக பத்திரிகைகளும், ஊடங்களும் விளங்கி வருகின்றனர். அந்த வகையில் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் எளிய நடையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது.

செய்திகள் மட்டுமல்லாமல், கல்வி, வணிகம், விவசாயம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகள் பற்றியும் புதிய தலைமுறை தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பி வருவது பாராட்டிற்குரியது. கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, மக்கள் சேவையில் இன்னும் பல்லாண்டு, பல பல ஆண்டு தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close