[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சமாளிக்க முடியாத பணிச்சுமை:மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தற்கொலை

medical-student-suicide-in-trichy-hostel

திருச்சி கல்லூரி மாணவியர் விடுதியில் முதுநிலை பட்டப்படிப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே அம்புஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் கயல்விழி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கும் மருத்துவர் சக்தி கணேசன் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆகியுள்ளது. கயல்விழியின் கணவர் சேலத்தில் மருத்துவராக உள்ளார். 

திருச்சியில் மாணவியர் விடுதியில் தங்கி கயல்விழி மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று கயல்விழி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பணிச்சுமை அதிகமாக இருப்பதாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close