[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பல குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேர் திருவாரூரில் கைது

ten-arrested-in-tiruvarur

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலயில், திருவாரூரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 6 பயங்கரவாதிகள் தமிழகத்தின் கோவை உட்பட சில இடங்களில் ஊடுருவியுள்ளதாகவும், அந்த 6 பேரில் ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாதி என்றும் மற்ற 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று  மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேரை திருவாரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close