[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

திமுக ஆட்சி காலத்திலேயே கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்!

p-chithambaram-first-arrest-by-dmk-period

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே ஒருமுறை கைதாகி சிறையில் இருந்திருக்கிறார். தமிழகத்தில்தான் இந்த கைது நடந்தது.

கடந்த 1989ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, சென்னையை அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்ற நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இதே கோரிக்கையை முன்வைத்து ஜி.கே.மூப்பனார், ப.சிதம்பரம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோரும் போராட்டம் நடத்தினர். 

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதுதான் ப.சிதம்பரத்தின் முதல் கைது. இந்த சம்பவம் நிகழ்ந்தது சனிக்கிழமை என்பதால் உடனடியாக பிணை பெறாத நிலையில், சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். கைதானவர்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஞாயிறன்று மதியம் நீதிபதி வீட்டில் விசாரணை நடத்தப்பட்டு ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். முதல் கைதின்போது சுமார் 15 மணி நேரம் சிதம்பரம் சிறையில் இருந்தார். இது நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு பிறகு ப.சிதம்பரம் இரண்டாவது முறையா‌க கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close