[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சுடுகாட்டிற்கு வழியில்லை - சடலத்தை பாலத்தில் தொங்கவிட்ட அவலம்

due-to-no-path-why-people-put-down-dead-body-from-bridge-in-vellore

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்குச் செல்ல பாதைகள் இல்லாததால், உயிரிழந்தவர் உடலை கொண்டு செல்ல வினோதமான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணயுரம் காலனி உள்ளது. பட்டியலினத்தவர் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் இவர்களுக்கான தனி சுடுகாடு உள்ளது. ஆனால், இங்கு போதிய வசதிகள் இல்லாததால், இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு இவர்கள் கொண்டு செல்கின்றனர். 

        

இந்தச் சூழலில், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருமருங்கிலும், ஆற்றிற்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து அங்குள்ள விவசாயிகள் வழியை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர்களின் சடலத்தை அப்பகுதி வழியாக எடுத்துச் செல்லவும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் இறந்தார். இவரது உடலை, விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி, அருகில் உள்ள பாலத்தில் இருந்து கயிற்றால் இறக்கி அதன் பின்னர் அங்கிருந்து இவர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இறந்த பிறகும் தொடரும் இந்த அவலம் பற்றி, கிராமமக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் தெரிவித்துள்ளனர்.

            

ஆற்றிற்கு இருமருங்கிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை அரசு கையகப்படுத்தி சுடுகாட்டிற்கு பாதையமைத்து, போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என்பது நாராயணபுரம் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close