[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிதம்பரம் மீது வழக்கு”- மு.க.ஸ்டாலின்

political-vendatta-in-chidambaram-case-says-dmk-prez-mk-stalin

அரசியல் காழ்ப்புணர்ச்சியாலேயே ப.சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இதனிடையே ப.சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனத்தை தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது. மேலும் ப.சிதம்பரம் சட்ட வல்லுநர் என்பதால் இந்த வழக்கை அவர் சட்டரீதியாகவே சந்திப்பார்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close