[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

தொழிலாளர் பிரச்னைக்கு தீர்ப்பாயங்களை அணுகுங்கள் - உயர்நீதிமன்ற கிளை

madurai-high-court-advised-to-labour-to-approach-labour-court-labour-tribunal

பிரச்னைகளுக்கு தீர்வு காண முதலில் தொழிலாளர் தீர்ப்பாயங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களை அணுக வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரியும் முத்துகிருஷ்ணன், கணேஷ் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு பதவி உயர்வு வழங்கி இளநிலை பொறியாளராக நியமிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையி்ல் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதேபோல், அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஃபோர்மேன் பணி விதிகளை தொழிலாளர்களிடம் கருத்து கேட்காமல் மாற்றியமைக்க தடை கோரி, நெல்லை மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்க (சிஐடியூ) பொதுச் செயலர் முத்துகிருஷ்ணன் மதுரைக் கிளையில்  மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரணியம், “தொழிலாளர் பிரச்னைகளை தீர்க்கவே தொழிலாளர் தீர்ப்பாயங்கள் , சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அங்கு வழக்கு தொடர்ந்தால் தாமதம் ஏற்படும் என்பதற்காக உயர் நீதிமன்றங்களை நேரடியாக அணுகுவதை ஏற்க முடியாது. எனவே மனுதாரர்கள் தங்கள் பிரச்னை தொடர்பாக தொழிலாளர் தீர்ப்பாயங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களை அணுகலாம்” என்று கூறினார். மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close