[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

வேளாங்கண்ணி யாத்ரீகர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி அமைப்பினர் கைது

christian-pilgrims-attacked-in-tamil-nadu-by-fringe-group-6-hindu-munnani-members-arrested

வேலூரில் புனித யாத்திரை சென்ற கிறிஸ்தவர்களை வழிமறித்து தாக்கியதாக இந்து முன்னிணி அமைப்பைச் சேர்ந்த 6பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வழியாக கர்நாடக மாநிலம் கேஜிஎஃப்-இல் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு தேவசகாயம் என்பவர் அவரது குழுவுடன் புனித யாத்திரை சென்றுள்ளார். 

                                 

அப்போது நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் என்னும் இடத்தில் இந்து முன்னணி கட்சியை சேர்ந்த 6 பேர், தேவசகாயம் உள்ளிட்டோரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் வைத்திருந்த தேவமதா சிலையை உடைத்துள்ளனர். 

          

இது குறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தேவசகாயம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிங்காரவேலன், பிரபு, சிவக்குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் மீது பொது சொத்து  சேதப்படுத்துதல், கொலை மிரட்டல், வழிமறித்து தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close