[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையை எதிர்த்தவர் படுகொலை

ganja-sales-against-person-murdered-in-kanchipuram

கஞ்சா விற்பனையை எதிர்த்த ஊர் பிரமுகர் கொடூர‌மான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் நிகழ்ந்துள்‌ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் பகுதியில் தனஞ்செயன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.‌ ஊர்த் ‌தலைவராக இருந்த இவர், அதே பகுதியில் க‌ஞ்சா ‌விற்று வந்த புருஷோத்தமன் என்பவரைத் தட்டிக்கேட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே வேறு‌ ஒரு பிரச்னையிலும்‌ முன்விரோதம் இருந்து வந்துள்ளது. புருஷோத்தமன் மீது தனஞ்செயன் காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். 

அந்தப் புகாரை திரும்பப் பெறுமாறு அவரை, புருஷோத்தமன் மிரட்டி வந்ததாக தெரிகிறது. ஆனால், தனஞ்செயன் புகாரை திரும்பப் பெற மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புருஷோத்தமன், 20க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் தனஞ்செயனின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். தாக்குதலில் தனஞ்செயனின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொடூர தாக்குதலை நிகழ்த்திவிட்டு தப்பியோடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close