[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆந்திரா: தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கியதாக தகவல்; தேடும் பணி தீவிரம்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கொலை செய்த மாமனார்

son-in-law-murdered-by-father-in-law-in-covai

மாமியாரை கன்னத்தில் அறைந்த மரு‌மகனை மாமனார் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் இடையர்பாளையத்தைச் சேர்ந்த பெயிண்டர் ராஜேந்திரனும், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஷாலினியும் ஓராண்டுக்கு முன் காதலித்து மணமுடித்துள்ளனர். ஷாலினி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், ராஜேந்திரன் சரிவர வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தாய் வீட்டுக்குச் சென்றுவிட்ட மனைவியை, அழைத்து வர ராஜேந்திரன் சென்றுள்ளார். 

அப்போது தனது மகளை சரியாக கவனிக்கவில்லை என்று கூறி ராஜேந்திரனுடன் ஷாலினியின் தாயார் மீனா வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தனது மாமியாரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மாமனார் தங்கமணி குமார், ரேஷன் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த மருமகன் ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் ஒரு வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன.

மருமகனை கத்தியால் குத்திய தங்கமணி குமார் தலைமறைவானார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி‌ வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த கொலை குறித்து விசாரித்து வரும் துடியலூர் காவல் துறையினர், தங்கமணி குமாரை தேடி வருகின்றனர். இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close