[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

கஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு

rare-type-monkey-found-in-kerala-by-police-search

கஞ்சா கடத்தப்படுவதாக காரில் நடத்திய சோதனையில் அபூர்வ வகை குரங்கு ஒன்று பிடிபட்ட விநோதம் நடந்துள்ளது. 

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் கேரள சுங்கத்துறையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா ? என வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காருக்குள் அபூர்வ வகை குரங்கு ஒன்று இருந்தது தெரியவந்தது, முதலில் அது எந்த உயிரினம் என்றே தெரியாமல் காவல்துறையினர் திகைத்தனர். 

ஆனால், அபூர்வ உயிரினம் என்று உணர்ந்து அந்த விலங்கை பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் வந்த இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காருக்குள் அரிய விலங்கு இருப்பதை அறிந்து அந்த வழியே சென்றவர்கள் காரை சுற்றிவளைத்து ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அது அபூர்வ குரங்கு என்பதும், கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ராகுல் என்பவருடையது என்றும் தெரியவந்தது. ராகுல் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால், அபூர்வ குரங்கை பாதுகாக்கும் விதமாக திண்டுக்கல்லில் ‌உள்ள நண்பர்கள் வீட்டில் கொடுத்து வைத்ததாகவும் காரில் வந்தவர்கள் கூறியுள்ளனர். வெள்ளம் வடிந்ததையடுத்து அதனை மீண்டும் கொண்டுவர ‌பவனிஷ், சுஜித்தை ஆகிய இருவரை ராகுல் அனுப்பியதும் தெரியவந்தது. 

விசாரணைக்குப் பின்னர் குரங்கை பறிமுதல் செய்ய காவலர்கள். அதனை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த அபூர்வ குரங்கு காட்டன் டாப் டாமரின் என்பதும், கொலம்பியாவில் அதிகம் வாழ்வது என்றும் தெரிய வந்ததுள்ளது. அரிதான இந்தக் குரங்கு கடத்தப்பட்டதா? எங்கு பிடிக்கப்பட்டது என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close