[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

one-dead-in-police-custody

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடங்குளத்தில் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவான‌ கிறிஸ்டோபரை தேடி வந்த காவலர்கள், அவரின் கைப்பேசி விவரங்களை ஆராய்ந்தனர். அப்போது கிறிஸ்டோபர், கருங்கல் பகுதியைச் சேர்ந்த லீலாபாய் என்பவரிடம் கைப்பேசியில் அதிக முறை பேசியது தெரியவந்தது.

பின்னர் லீலாபாயை, நேற்று மாலை வள்ளியூர் காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவலர்கள் விசாரித்தனர். இரவிலும் விசாரணை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.‌ இந்நிலையில் லீலாபாய்க்கு இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்தப் பெண் உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close