[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

டீ கடைக்காரர் கொல்லப்பட்டது ஏன்..?: அதிர்ச்சி தகவல்

man-murdered-near-madurai-for-asking-money-for-tea

டீ குடித்ததற்காக பணம் கேட்ட கடை உரிமையாளரை இளைஞர்கள் சிலர் கொடூரமாக குத்திக் கொலை செய்த பயங்கரச் சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் தேநீர்க் கடை நடத்தி வந்த மாரிமுத்து, நேற்று அதிகாலை வழக்கம்போல் தனது கடையைத் திறந்தார். அது தான், தனது வாழ்வின் கடைசித் தருணம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. திடீரென கடைக்குள் புகுந்த ஒரு கும்பல், மாரிமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. கழுத்து, தலை, நெஞ்சு உள்ளிட்ட 7 இடங்களில் படுகாயமடைந்த மாரிமுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

தான் உண்டு தனது தொழில் உண்டு என்கிற ரீதியில் வாழ்ந்‌து வந்த ஒருவர் இத்தனை கொடூரமாக கொல்லப்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை. அதில் கிடைத்த தகவல்கள் தான் காவலர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் மாரிமுத்துவின் கடையில் டீ குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

தேநீர் அருந்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அங்கு கஞ்சா புகைப்பது, மது குடிப்பது என டீக்கடையை போதைக் கூடாரமாக்கிவிட்டனர். இது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக இருந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடையில் வாங்கிய டீ மற்றும் சிகரெட்டுகளுக்கு பணமும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, வாங்கிய பொருட்களுக்கு கறாராக பணம் கேட்டதோடு, அவர்களை கடைக்கு வரவேண்டாம் என கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் மனதில் வன்மத்தை வளர்த்துக்கொண்ட அந்த இளைஞர்கள், மாரிமுத்துவை திட்டமிட்டு தீர்த்துக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே கொலைக் கும்பலில் இருந்து தப்பிக்க முயன்ற ஆத்திகுளத்தைச் சேர்ந்த வீரகார்த்திக் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்‌தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. வீட்டிற்கு ஒரே பொருளாதார ஆதாரமாகத் திகழ்ந்த மாரிமுத்துவை இழந்து, ஆதரவின்றி தவிக்கிறது அவரின் குடும்பம். கஞ்சா போதையில் சர்வசாதாரணமாக ஒரு உயிரை பலி கொண்ட இளைஞர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டுமென கொந்தளிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : மதுரைகொலைMaduraiMurder
Advertisement:
Advertisement:
[X] Close